வகை  |  odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாள் 7: நம்ப கற்றல்

வாசியுங்கள்: மத்தேயு 6:25-34

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (வச.25)

ஒரு குழந்தையாக இருக்கும் போது, பள்ளியில் நண்பர்களைச் சம்பாதிப்பதைக் குறித்து நான் கவலைப்பட்டேன். ஒரு கல்லூரி மாணவனாக, பட்டம் பெற்ற பிறகு வேலைக்காகக் கவலைப்பட்டேன். இன்று, நான் பெற்றோரின் உடல்நிலை குறித்தும், எனது புத்தகங்களை எப்படி விற்பது என்றும் கவலைப்படுகிறேன்.

நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? சில நொடிகள்…

நாள் 6: புதிய முகவரி?

வாசிக்கவும்: பிலிப்பியர் 4:5-8

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (வச.7)

புதிய வீட்டிற்கு மாறலாமா அல்லது பழைய முகவரியில் தொடரலாமா? நானும் என் கணவரும் வீடு மாறும் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்தபோது, இந்த கேள்வி பல நாட்கள் என் மனதை நிரப்பியது. நாங்கள் புதிய வீட்டைக் கண்டுபிடிக்கும் எங்கள் பயணத்தின்போது ஒரு சில பிரச்சனைகள் தெளிவாகத் தெரிந்தன. உதாரணமாக, அடித்தளத்தின் நடு அறையில் ஒரு தண்ணீர் குழாய் தரையிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது, நிலவறையில்…

நாள் 5: நல்லது, அது பூரணமானது!

வாசிக்கவும்: கொலோசெயர் 1:15-22

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (வச.20).

கருத்தரங்கு பேச்சாளர் ஒருவர் எல்லாவற்றிற்கும் நேர்மறையான சிந்தையுடன் அணுகுவதின் தேவையை வலியுறுத்தினார். பெருவாரியான காரியங்களுக்கு அது சரி என்று நான் அதை ஏற்றுக்கொண்டுள்ளேன். அந்த பெண் பேச்சாளர் எரிச்சல் மிக்க வேளையிலும் நாம் எவ்வாறு நேர்மறையாக இருக்க முடியும் என்பதை விவரித்தார். யாரோ ஒருவர் முரட்டுத்தனமாக நமக்குச் சற்று முன்னால் இருக்கும் அந்த பிரதான வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைகிறார்…

நாள் 4: உன்னைப் போல

வாசியுங்கள்: லேவி 19: 1-18, 33-34

“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்”. (வ.33-34)

பெல்ஜியம் நாட்டில் கீல் ஒரு தனித்துவமான மக்கள்தொகை கொண்ட ஒரு அழகான நகரமாக இருக்கிறது. அங்குள்ள மக்களில் கணிசமான சதவீதம் மனநோய் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு விருந்தளித்துப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு நோயுற்ற அந்த விருந்தினர்களின் நோயைப் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.…

நாள் 3: இரக்கமுள்ள மனம்

வாசியுங்கள்: மத்தேயு 25:31-46

வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் (வச.36).

பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது. இந்த தீவிர மனநோயால் அவர் வேலையை இழந்தார், சிறைச்சாலை செல்ல நேரிட்டது மேலும் வீடற்றவராகவும் மாறினார். அவருக்கு எவ்வாறாவது உதவிசெய்ய இரண்டு மாதங்களாக நான் சமூக சேவையாளர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைப்பேசி மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டேன். எனது குடும்ப உறுப்பினரின் திருச்சபை நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். ஆனால்…